VERBS ( வினைச்சொல் ) பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்
A verb is a word which tells or asserts something about a person or thing…
ஒரு பொருள் அல்லது ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல் வினைச் சொல் எனப்படும்.
For simple ex :
Laxmi Sings.
லட்சுமி பாடுகிறாள்.
Ragu was invited.
ரகு அழைக்கப்பட்டான்.
He is kannan.
அவன் கண்ணன்.
சரி இப்போது வினைச் சொல்லின் வகைகளை பார்க்கலாம்
There are three kinds of verbs ( வினைச்ச்சொற்கள் மூன்று வகைப்படும் )
1) Transitive Verbs ( செயப்படு பொருள் குன்றாவினை )
2) Intransitive Verbs ( செயப்படு பொருள் குன்றியவினை )
3) Auxiliary Verbs ( துணை வினைச் சொற்கள் )
சரி இவற்றை பற்றி 1 by 1 ஆகா பார்க்கலாம்
1) Transitive Verbs ( செயப்படு பொருள் குன்றாவினை )
A Transitive Verb is a which has an object.
பொருள் என்பது ஒரு மாற்று வினை ஆகும்.
For Ex :
He plays cricket.
அவன் கிரிக்கெட் விளையாடுகிறான்.
சரி இதில் ‘ plays ‘ – என்ற செயல் ‘ அவன் ‘ என்ற subject – ல் இருந்து cricket என்ற ‘ object ‘ – ற்கு செல்கிறது. அதனால் plays என்பது Transitive Verb ஆகிறது.
இது புரியுதா ? புரியலனா இன்னும் சில உதாரணங்கள் பார்க்கலாம்
karthik eats apple .
கார்த்திக் ஆப்பிள் சாப்பிடுகிறான்.
Mano writes Novel.
மனோ நாவல் எழுதுகிறான்.
2) Intransitive Verbs ( செயப்படு பொருள் குன்றியவினை )
An Intransitive Verb is a verb which does not have an object.
அகநிலை வினை என்பது ஒரு பொருளைக் கொண்ட ஒரு வினைதான்.
For Ex :
Geetha stands at the door
கீதா கதவின் அருகில் நிற்கிறாள்.
இதில் ‘ Stands ‘ என்ற வினைச் சொல்லிற்கு Object இல்லாததால் இது Intransitive Verb எனப்படுகிறது.
மேலும் சில உதாரணங்கள்
He walked slowly.
அவன் மெதுவாக நடந்தான்.
He travelled a long distance.
அவன் நிறைய தூரம் பயணம் செய்தான்.
3) Auxiliary Verbs ( துணை வினைச் சொற்கள் )
I have a pen
நான் ஒரு பேணா பெற்றிருக்கிறேன்.
I have lost my pen.
நான் என்னுடைய பேனாவை தொலைத்துவிட்டேன்.
இவற்றில் முதல் எடுத்துக்காட்டில் ‘ have ‘ என்பது உடமை என தனித்துப் பொருள்படும் ( Principal Verb ) வினைச்ச்சொல்லாக இருக்கிறது.
இரண்டாவது எடுத்துக்காட்டில் have என்பது lose என்ற வினைச்ச்சொல்லிற்கு துணை வினையாகப் பொருள்படுகிறது.
For Ex :
Have
Be
Do
Shall
Will
May
இவையே Auxiliary Verb எனப்படுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக, எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.