Interrogatives Sentences — வினாக்கள் ?
1) Simple Present Tense :
I, We, You, They ஆகியவற்றோடு Do – வும் , He, She, It – டன் Dose – ஐயும் பயன்படுத்த வேண்டும்.
For Ex :
Do I disturb you?
நான் உனக்கு தொல்லை செய்கிறேனா?
Dose he hesitate?
அவன் தயங்குகிறானா?
Dose the computer work?
கம்ப்யூட்டர் வேலை செய்கிறதா?
Do the children play?
குழந்தைகள் விளையாடுகிறார்களா?
2) Present Continuous :
Am, is, are +………… ing.
For Ex :
Am I seeing a Cinema?
நான் ஒரு சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறேனா ?
Are they playing football?
அவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்களா?
Is the driver driving the car?
ஓட்டுநர் காரை ஒட்டிக்கொண்டிருக்கிறாரா?
3) Present Perfect :
Has, have + Past participle
For Ex :
Has she come?
அவள் வந்திருக்கிறாளா?
Have you spent all the money?
நீ எல்லா பணத்தையும் செலவழித்து விட்டாயா?
Have they escaped from the prison?
அவர்கள் சிறையிலிருந்து தப்பித்து இருக்கிறார்களா?
4) Simple Past :
For Ex :
Did you go to the library yesterday?
நீ நேற்று நூலகம் சென்றாயா?
Did Meena meet you yesterday?
நேற்று மீனா உன்னை சந்தித்தாளா?
Did she dance very well?
அவள் மிக நன்றாக நடனமாடினாளா?
5) Past Continuous :
Was, were + ing.
For Ex :
Was karthik singing the song?
கார்த்திக் பாட்டு பாடிக்கொண்டிருந்தனா?
Were we travelling?
நாங்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தோமா?
Was he playing?
அவன் விளையாடிக்கொண்டிருந்தனா?
6) Past Perfect Tense :
Had + Past participle
For Ex :
Had I informed you?
நான் உனக்கு தெரிவித்து இருந்தேனா?
Had you tried for it?
நீ அதற்கு முயற்சி செய்து இருந்தாயா ?
Had he completed the work?
அவன் வேலையை முடித்து இருந்தனா ?
7) Simple Future :
Will or shall + Present tense
For Ex :
Shall I accompany you?
நான் உன்னோடு வரலாமா?
Shall I call him?
நான் அவனை அழைக்கட்டுமா?
Will you play cricket?
நீ கிரிக்கெட் விளையாடுவாயா?
Will he drive the car fast?
அவன் காரை வேகமாக ஓட்டுவானா?
8) Future Continuous :
Will + shall + be + …………. ing .
For Ex :
Will he be waiting for you?
அவன் உனக்காக காத்து கொண்டிருப்பானா?
Will you be playing?
நீ விளையாடிக் கொண்டிருப்பாயா?
Will he be meditating?
அவன் தியானம் செய்து கொண்டிருப்பானா?