உலகின் பல பகுதிகளில் கற்களாலான, பல பண்டைய நினைவுச் சின்னங்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன, இந்த நினைவுச் சின்னங்கள் ஏன் எப்போது யாரால் நிறுவப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறாததால் விஞ்ஞானிகளையும் வரலாற்று நிபுணர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளன, அப்படியான 5 பண்டைய நினைவுச் சின்னங்களை பற்றி இப்போது பாப்போம்.
Beltany Stone Circle : அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ராஸ்வெல் நகருக்கு அருகில் காணப்படும், இந்த Beltany Stone Circle என்பது 64 பாறாங் கற்களைக் கொண்டு 145 அடி விட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கல்வட்டமாகும். கிமு 1400 – ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இந்த கல் வட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் ஆறடி உயரம் கொண்டிருக்கின்றன, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த beltany கல்வட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றிய உறுதியான தகவல்களை கண்டறிய முடியவில்லை என்ற போதிலும் அனுமானங்கள் ஆக சில கோட்பாடுகள் நிலவுகின்றன, அதில் ஒரு கோட்பாடு இந்த Beltany கல்வட்டத்தின் பூர்விகம் அதன் பெயரிலேயே மறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
அதாவது அயர்லாந்தில் பெல்டன் எனப்படும், தீ திருவிழா ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது, சூரியனை மகிமைப் படுத்தும் பொருட்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவின் ஏதோ ஒரு சடங்கிற்காக இந்த Beltany கல்வெட்டுகள் உருவாக்கப் பட்டிருக்கலாம் என கூறபடுகிறது, மற்றொரு கோட்பாடு இந்த கல்வெட்டும் ஏதாவது சவ அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடையாள குறியாக உருவாக்கப் பட்டிருக்கலாம், என தெரிவிக்கிறது,
Bada Valley Megaliths : இந்தோனேஷியா நாட்டில் என்பது அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும், இங்கு நேர்த்தியாக செதுக்கப்பட்ட சில பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன, மனித முகத்தை உருவாக்கப்பட்டன என்பகற்கான ஒத்த வடிவில் அழகாக செதுக்கப்பட்டிருக்கும் இந்த பழங்கால
The Carnac Stones : பிரான்ஸ் நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் பிரிட்டானி பிராந்தியத்திலுள்ள, Carnac கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாறாங்கற்கள் நேர்வரிசையில் 12 கிலோ மீட்டருக்கு நடப்பட்டிருக்கின்றன, இந்த கற்கள் யாவும் கற்காலத்தில் அதாவது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் நிறுவப், பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது, ஆனால் இவ்வளவு தூரத்திற்கு கற்கள் நேர் வரிசையில் நிருவப்பட்டதற்கான நோக்கம் எதுவாக இருக்கும் என்பதற்கான காரணங்களை தொல்லியல் வல்லுனர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை, ஆயினும் இந்த கற்கள் தொடர்பான பல கட்டுக்கதைகள் எழுப்புகின்றனர், அதில் ஒன்று இந்த கற்கள் யாவும் பண்டைய ரோம் சாம்ராஜ்யத்தின் இறந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் கருத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் விஞ்ஞான ரீதியான ஆய்வு ஒன்று கற்கால மக்கள் பூகம்பத்தை முன் கூட்டியே அறியும் பொருட்டு இத்தகைய கண்ணு அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கலாம் என சொல்கிறது.
Rudston Monolith : என்பது இங்கிலாந்தில் உள்ள மிகவும் உயரமான ஒரு கல் தூண் ஆகும். Rudston கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த கல் தூணின் உயரம் 25 அடி ஆகும். கிமு 1500 ஆம் ஆண்டு நிறுவப் பட்டிருக்கலாம் என கருதப்படும். இந்த கல்தூணில் பூர்வீகம் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளூர் கிராம மக்கள் மத்தியில் நிலவுகின்றன, அதில் ஒரு கதை தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு சாத்தான் எறிந்த கல் இடித்தால் இது எனவும் தேவாலயத்தின் மீதான குறி தவறியதால், இந்தக் கல் ஈட்டியானது கல்லறைத் தோட்டத்தில் நின்று விட்டது எனவும் கூறுகிறார்கள். மற்றொரு கதை கல்லறைத் தோட்டத்தை உருகுலைக்க முயன்ற யாரோ ஒருவரைத் தாக்கும் பொருட்டு காக்கும் சக்திகளால் எய்யப்பட்ட ஈட்டித்தன் இது என சொல்லப்படுகிறது.