வியாபாரத்தின் ஒரே நோக்கம்  லாபத்தை அடைவது அந்த லாபத்தை அடைய நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்குவதில்லை பலவித தந்திரங்களை கையாண்டு ‘நுகர்வோரை குழப்பி மயக்கி நம்பவைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்று விடுகின்றனர், நிறுவனங்கள் செய்யும் இத்தகைய  தந்திரங்களை கண்டறியும்போது, நுகர்வோர் நிச்சயமாக அந்நிறுவன  பொருட்களை வாங்குவதை முழுமையாக நிறுத்திவிடுவார்கள் ‘நிறுவனங்கள் செய்யும் அவ்வாறான 5 வியாபார தந்திரங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
 

பேக்கேஜ் இறைச்சிகள்

 
சூப்பர் ‘மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ் இறைச்சிகள் நல்ல சிவப்பாகவும், பிரெஷ் -ஆகவும்  இருப்பதை பலர் பார்த்து இருக்கக்கூடும்  இறைச்சியானது பேக் செய்யப்பட்டு பல நாட்கள் ஆகி இருந்தாலும் கூட  இறைச்சியின் சிவப்பு நிறம் சற்றும்  மங்காது புதிது போலவே காட்சியளிக்கும்” இதற்கு பேக்கேஜ் இறைச்சி ‘நிறுவனங்கள் செய்யும் ஓர் தந்திரமே காரணம்.
 
 அதாவது  இறைச்சிகள் பேக்  செய்யப்படுவதற்கு முன்பாக கார்பன் – மோனாக்சைடு  எனும் புகையிடப்படுகின்றன,  கார்கள்  வெளியேற்றும் நச்சுமிக்க  அந்த புகையே  கார்பன் மோனாக்சைட் ஆகும். பொதுவாக இறைச்சிகள் வெட்டப்பட்டு  சிறிது நாட்கள் ஆனவுடன் இறைச்சியின்  நிறம் சிவப்பு இழந்து பழுப்பு நிறத்திற்கு மாறத் துவங்கி இறைச்சி பழையதாகி விட்டது என்பதை அறிவிக்கவும் இதனை தவிர்க்கவே பேக்கேஜில் இறைச்சி, நிறுவனங்கள் modified அட்மாஸ்பியர்   பேக்கேஜிங் எனப்படும் நுட்பத்தை கையாளுகின்றனர். அட்மாஸ்பியர் பேக்கேஜிங் என்பது பேக்கேஜிங்-ல்  உள்ளிருக்கும்  காற்று, மண்டலத்துடன் செயற்கையான மற்றொரு வாய்வை  கலந்து செய்யப்படும் ‘பேக்கேஜிங் ஆகும்.
 
 இந்த வாயுவானது பேக்கேஜிங் -ல்  இருக்கும்  உணவுப் பொருட்களை கூடுமான காலம் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஆக இறைச்சிகளை  இவ்வாறு பேக் செய்வதற்கு முன்பாக  அவற்றை கார்பன் மோனாக்சைடு புகைமூட்டத்தில் வைப்பார்கள் இதன் காரணமாக இறைச்சிகள் சுமார் ஒரு ஆண்டு வரை சிவப்பாக அழகாக காட்சியளிக்கும் சில நுகர்வோர் அமைப்புகள் இறைச்சிகள் மீது நச்சுமிக்க கார்பன் மோனாக்சைடு புகையை  பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இறைச்சி பிரஷ்ஷாக இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பதால் கார்பன் மோனாக்சைடு பயன்பாட்டை கைவிட இறைச்சி நிறுவனங்கள் மறுத்துவிட்டனர்.
 

பிளாண்ட் obsolescence 

பெரும்பான்மையான உற்பத்தி நிறுவனங்கள் கையாளும் பிளாண்ட் obsolescence என்ற தந்திரத்தை நுகர்வோர்கள் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். பிளாண்ட் obsolescence என்பது ஒரு நிறுவனம் அதன் உற்பத்திப் பொருளின் திட்டமிட்டு செய்யும் நாசவேலையை குறிக்கிறது இதன்மூலம் அந் நிறுவனம் வெளியிடும் அந்த உற்பத்திப் பொருளின் புதிய பதிப்பை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஸ்மார்ட் போனைப்  வாங்குகிறீர்கள் என  வைத்துக்கொள்வோம் அந்த  ‘ஸ்மார்ட்போனில் அனைத்து வசதிகளும் , இருக்கும் ஆனால் மெமரி கார்ட்  slot -யை  திட்டமிட்டு நீக்கியிருப்பார்கள் storage capacity  போதாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நீங்கள் அதே நிறுவனம் வெளியிடும்  புதிய மாடல் போனில் மெமரி கார்டு ஸ்லாட் இருப்பதால் அந்த புதிய மாடல் போனுக்கு மாறுவீர்கள் புதிய மாடல் போனில் மெமரி கார்டு  ஸ்லாட்  வைத்திருக்கும் நிறுவனம் இந்த முறை Headphone jack – யை நீக்கியிருப்பார்கள். இதற்கு அடுத்த மாடலில் இவை இரண்டும் இருக்கும் ஆனால் வேறு ஏதாவது ஒன்று திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கும் வியாபார நோக்கோடு நிறுவனங்கள் செய்யும் இந்த தந்திரத்தையே பிராண்டு obsolescence என்று அழைக்கின்றார்கள்.
 
அதேபோல் சில நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் ஏதாவது ஒரு உதிரி பாகத்தை வேண்டுமென்றே தரம் குறைந்ததாக பொருத்தியிருப்பார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த உதிரி பாகங்கள் செயல் இயக்க, அதே பொருளில் லேட்டஸ்ட் version -யை   வாங்க முனைவீர்கள். கார் உற்பத்தியாளர்கள் கூட இதே  சுதந்திரத்தைப் பயன்படுத்தி தான் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். நாம் எவ்வளவுதான் லேட்டஸ்ட் Versions  பொருட்களை வாங்கினாலும் அதில் ஏதாவது ஒரு குறையை திட்டமிட்ட  உருவாக்கியிருப்பார்கள்.
 

Gluten Free 

 
உணவு நிறுவனங்களின் சமீபத்திய வியாபார தந்திரம் Gluten Free Foods எனப்படும் பசையம் இல்லாத உணவுகள் என்கிற பிரச்சாரமாகும். Gluten என்பது தானியங்களில் இருக்கும் ஒட்டும்  தன்மை கொண்ட பசை போன்ற ஒரு பொருளாகும், குறிப்பாக இந்த கோதுமையில் Gluten அதிக அளவில் இருக்கிறது இதன் காரணமாகத்தான் கோதுமை மாவைப் பிசைந்தால்  எலாஸ்டிக் தன்மையைப் பெறுகிறது.  இன்று  பொதுமக்களிடையே தங்கள் உடல் நலனை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை  அதிகமாக்கியுள்ளது மக்களின் இந்த அக்கறையை பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை கரைசேர்க்க உணவு நிறுவனங்கள் கையாளும் தந்திரம் தான் Gluten free food ஏமாற்றுத்தனம். இன்று பேக்கரிகள் confectionery கள் மற்றும் கடைகளில் கிடைக்கும் ஒவ்வொரு உணவு தயாரிப்புக்கும் Gluten  free என்ற மற்றொரு Version  வைத்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் Gluten  அல்லாத உணவுகளுக்கு கூட Gluten Free  என்கிற மற்றொரு Version பொருட்களை வைத்து விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலான உணவு தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து Gluten  உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்குவதாக கூறி விளம்பரம் செய்து மக்களை நம்பவைத்து விட்டனர். உண்மையில் Gluten – ல்  பெரும்பாலான மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை ஆனால் SENZA -எனும்  நோயால்பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே Gluten அல்லாத  உணவுகளை உட்கொள்ள  வேண்டும். SENZA நோய் என்பது gluten  ஒவ்வாமை ஏற்பட்டுச் சேரிமானத்தை சீர்குலைக்கும் ஒரு நோயாகும், நூற்றில் ஒருவர் மட்டுமே இந்நோயால் பாதிக்கப்படுகிறார், Gluten Free  foods என்பது இவர்களுக்கானது  மட்டுமே.
 
 

பாட்டில் குடிநீரை காட்டிலும் குழாய் நீரே  ஆரோக்கியமானது 

 
 குழாயில் வரும் குடிநீரை காட்டிலும் தங்களது பாட்டில் குடிநீர் சுத்தமானது மற்றும் ஆரோக்கியமானது என விளம்பரங்களில் பிரச்சாரம் செய்து பொது மக்களை நம்ப வைத்த பல தனியார் குடிநீர் நிறுவனங்கள் குழாய் நிறைய வெறுமனே வடிகட்டி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றனர். 
 
உண்மையில் பாட்டில் குடிநீரை காட்டிலும் குழாய் நீரே  ஆரோக்கியமானது தனியார் குடிநீர் நிறுவனங்கள் குழாய் நீரை வடிகட்டும் போது அதில் இருக்கும் ப்ளோரைடு என்ற தாது பொருள் நீக்கப்பட்டு விடுவதால் பாட்டிலில் குடிநீரை தொடர்ந்து பயன்படுத்துவோரின் பற்கள் சொத்தையாகும் வாய்ப்புகள் அதிகம் மேலும் குழாய் நீரும் பாட்டில் குடி நீரும் வெவ்வேறு விதமான விதிகளுக்கு உட்பட்டது.
 
குழாய் நீர் பாட்டில் குடி நீரை விட மிகவும் கடுமையான தர அளவுகோலை சந்தித்த பின்னரே பொது மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மற்றும் கண்டிப்பாக பாட்டில் குடிநீரை காட்டிலும் குழாய் நீர் சுத்தமானது சுகாதாரமானது, மற்றும் ஆரோக்கியமானது, இது தெரியாத பெரும்பாலானோர் வரை சுத்தமானது விசேஷமானது எனக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். சில தனியார் குடிநீர் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் குடிநீரை மழைநீர் எனவும், பணியாற்று நீர் எனக் கூவி விற்கின்றனர். இதுவெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் வியாபாரத் தந்திரமே அன்றி வேறில்லை.
 

பேபி கேரட் 

 

கேரட் – களில் பேபி கேரட் என்று ஒரு வகை இருக்கிறது குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கேஜ் செய்யப்பட்டு விற்கப்படும் இந்த பேபி கேரட்டுகள் தோலுரிக்கப்பட்டு பிரகாசமான, ஆரஞ்சு நிறத்தில் நீள் உருளை வடிவத்தில் குட்டையாக இருக்கும். இத்தகைய பேபி கேரட்டுகள் 100 சதவிகிதம் இயற்கையானது எனவும்,  சாதாரண கேரட் – களை  காட்டிலும் கூடுதல் ஊட்ட சத்து மிகுந்தது என கூறி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பேபி கேரட்டுகள் விசேஷமாக பயிர்  செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன என நம்பி பெரும்பாலானவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் உண்மையில் சாதாரண கேரட்டுகளையே  துண்டாக்கி, சீவி, மெருகேற்றி  அவற்றை பேபி கேரட்டுகள் என விற்கிறார்கள். 
 
1980 – களில் தான் முதன்முதலாக பேபி கேரட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகளில்  சுமார் 70 சதவிகிதம் கோணல்மாணலான வடிவத்துடனும் உடைந்தும் இருந்தமையால் அவை விற்பனைக்கு உகந்ததாக இல்லாமல் போனது, இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
 
இதனை சரிசெய்ய Mike என்பவர் ஒரு தந்திரத்தை கையாண்டார், அதாவது விற்பனைக்கு லாயக்கில்லாத கேரட்டுகளை நறுக்கி, சீவி  பேபி கேரட்  என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய அவை சந்தைகளில் பெரும் வெற்றி பெற்றன இப்போதெல்லாம் விவசாயிகள் பேபி கேரட்டுகளை உருவாக்க கேரட்டுகள்  முழுமையாக வளர்ச்சி அடைய முன்பாகவே அறுவடை செய்து அவற்றை சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
 
எனவே அதிக விலை கொடுத்து பேபி கேரட்டுகள் வாங்குவதற்கு முன்பாக அவை விலை மலிந்த  சாதாரண கேரட்டுகள்தான்  என்பதை நினைவில்கொள்க இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், ஷேர் செய்யுங்கள்.

By Karthik