வாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட

பால் சார்ந்தப் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதுவே வாய்வுத் தொல்லையை உண்டாக்கும், அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக் அதிக அளவு வாய்வு தொல்லையை ஏற்படுத்தும், எனவே நீர் மோர் போன்றவற்றை பால் – க்கு பதில் எடுத்துக் கொள்ளலாம்.

என்று வீட்டிலும் அலுவலகத்திலும் சுவிங்கத்தை வாயில் மென்றவாறு பேசுவார்கள் அல்லது வேலையைப் பார்ப்பார்கள் சூயிங்கத்தை மென்று கொண்டே இருந்தால் வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்து விடும் இதனால் வாயுத்தொல்லை ஏற்படக் காரணமாகிறது.

கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால் செரிமானம் மெதுவாக நடைபெற்று உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும் இவ்வாறு நீண்ட நேரம் ஆவதால் வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும் எனவே கொழுப்புகள் நிறைந்த உணவு ஜங் ஃபுட் சாப்பிடுவது குறையுங்கள்.

உருளைக்கிழங்கு பீன்ஸ் பருப்பு வகை உணவுகள் முள்ளங்கி முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் அதற்காக முற்றிலும் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதற்கில்லை இதுபோன்ற உணவு கற்றுக்கொள்ளும் இருப்பதால் குறைந்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

நம் தாத்தா பாட்டிகள் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வார்கள் காரணம் இன்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை சாப்பிடும் பொழுது பேசுவதால் உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றினுள் செல்கிறது இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது ஆகவே பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் சில இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டுச் செல்வார்கள் அதுவும் வாய்வுத் தொல்லைக்கு முக்கிய காரணம் உணவை நன்றாக மென்று உமிழ்நீருடன் சாப்பிட்டு பாருங்கள் வாயுத்தொல்லையை உங்கள் பக்கம் வராது மீண்டும் ஒரு பயனுள்ள சிறப்பான வீட்டு மருத்துவ தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

By Karthik