Interesting information has been revealed about the amazing powers of cat-dog-elephant

Interesting facts about cats:
These can detect earthquakes 10 to 15 minutes before they occur.
They can drink sea water. Its kidneys are capable of filtering salt.
70 percent of a day is spent sleeping.
After tasting a food three times and testing it, the fourth time it is confidently eaten.
Expels sweat through his soles.
தமது காதே 180 டிகிரி வரை அசைக்க கூடியது. இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக் கூடிய திறமையும் கொண்டது.
இதன் மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்கு அதிகம்.
மனிதர்களின் இதயத்துடிப்பை விட இவற்றின் இதயத்துடிப்பு ஒரு மடங்கு அதிகமானதாகும். ஒரு நிமிடத்தில் பூனைகளின் இதயம் சராசரியாக 120 முதல் 140 வரை துடிக்கும்.
பூனைகள் அவற்றின் உடல் நீளத்தை விட ஐந்து மடங்கு அதிகமான உயரம் வரை துள்ளிக்குதிக்கும் வியத்தகு திறன் உடையவை ஆகும்.
நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான சப்தங்களை எழுப்ப கூடியது.
இவற்றால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
குறைவான மங்கலான ஒளியிலும் துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டது.
ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரங்களை அவைகளின் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும், அழகுபடுத்திக் கொள்வதற்காகவும் செலவு செய்கின்றன.
பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
மனிதர்களை விடவும் இவற்றின் கேட்கும் திறன் அதிகம்.
இவற்றிற்க்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.

நாய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் :
மனிதர்களிடம் உள்ள மோப்ப சக்தியை விட இவற்றின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும்.
இவை மனிதர்களின் உணர்வுகளை கூட அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்து கொள்ளும் அசாத்திய திறன் உடையவை ஆகும்.
அதுமட்டுமில்லாமல் மனிதர்களுக்குள் இருக்கும் கேன்சர் உள்ளிட்ட நோய்களையும் மோப்ப சக்தியின் மூலம் தெரிந்து கொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு.
ஒரு சராசரியான நாய் ஒரு மணி நேரத்தில் 19 மைல்கள் வரை ஓடும் திறன் உடையது ஆகும்.
நாய்கள் அவைகளின் பாதங்கள் மற்றும் மூக்கின் வழியாக மட்டுமே வியர்வையை வெளிப்படுத்தும். இதை தவிர நாய்களின் மற்ற உடல் பகுதிகளில் வியர்வை சுரக்காது.
நாய்க்குட்டிகள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்கள் வரை தூக்கத்துக்காக மட்டுமே செலவு செய்யும்.
மனிதர்களுக்கு கைரேகைகளில் வித்தியாசம் இருப்பது போலவே இவற்றின் மூக்கு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை.
இரவு நேரத்தில் மனிதர்களின் பார்வைத் திறனை விட இவற்றின் பார்வைத்திறன் அதிகமானதாக இருக்கும்.
சராசரி உடல் வெப்பநிலை 101.2 டிகிரி.
நாய்க்கு மனிதர்களை விட அதிக சக்தி கொண்ட செவிப்புலன் உள்ளது, மனிதர்களை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்டது நாய்கள்.
இவற்றால் மனிதர்கள் பேசும் வார்த்தைகளில் 1000க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்.
சராசரியாக ஒரு நாயின் அறிவுத்திறனானது, ஒரு 2 வயது குழந்தையின் அறிவுத் திறனுக்கு ஈடானது.
நாய் குட்டிகளுக்கு 28 பற்கள் இருக்கும். வளர்ச்சியடைந்த நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும்.
நாய்க்குட்டிகளுக்கு பிறக்கும் போது கண் காணாது, காது கேட்காது, பல் இருக்காது.

யானை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் :
நின்று கொண்டே தூங்கும்.
இவற்றால் துள்ளிக் குதிக்க முடியாது.
பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
இவற்றிற்க்கு பிடிக்காத ஒரு உயிரினம் ‘தேனீ’.
தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரங்களை மட்டுமே தூங்குவதற்காக செலவிடுகின்றன.
தினமும் 12 முதல் 16 மணி நேரங்களை உணவை உண்பதற்காக மட்டும் செலவு செய்கின்றன.
இவை நீரில் நாற்றாக நீந்தும். 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கிச்செல்லும்.
துதிக்கையில் மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசை அடுக்குகள் காணப்படுகின்றன.
ஒரு வளர்ந்த யானை தன் துதிக்கையால் சுமார் 700 கிலோ எடையைக் கூட தூக்க முடியுமாம்.
தன் துதிக்கையால் சுவாசித்தாலும், அதன் வாயால் தான் வாசனைகளை அறிந்துகொள்கின்றன. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தைக்கூட யானைகளால் எளிதில் கண்டறிய முடியும்.
இவற்றிற்க்கு கண் இமைகள் உள்ளன.
பிறக்கும் போது அவை கண் பார்வையற்றவையாகவே பிறக்கின்றன.
மனிதர்களின் குரல்களை அடையாளம் அறிந்துகொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான குரல் வேறுபாடுகள், மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் முதலியன யானைகளுக்கு தெரியும்.
அதீத ஞாபக சக்தியை கொண்ட உயிரினம் ஆகும்.
கண் பார்வை திறன் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கேட்பதிலும், நுகர்வதிலும் அசாத்தியத் திறமை உண்டு.
மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட இவற்றின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.