இப்படிதான் வாழ்கிறார்களா ஆப்ரிக்காவின் மாசாய் இன மக்கள்

Africa- வின் மிகவும் பிரபலமான இனக்குழு, Masai. வடக்கு, மத்திய மற்றும் தெற்கு Kenya, மற்றும் வடக்கு Tanzaniaவின் எல்லையில் காணப்படும், மாசாய் மக்கள், தங்கள் கால்நடைகளுடன், மேய்ச்சல் நிலப்பகுதிகளில் வாழும், நாடோடி மக்கள் ஆவர்.
மாசாய் மக்களின் தனித்துவமான மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகள் மற்றும் முக்கிய தேசிய பூங்காக்களுக்கு, அருகாமையில் இருக்கும், அவர்களின் குடியிருப்புகள் காரணமாக, கிழக்கு Africaவின், நன்கு அறியப்பட்ட இனக்குழுவாக உள்ளனர்.
மா எனும் மொழிய பேசும், மாசாய் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தை பற்றிய, ஏழு சுவாரசியமான விஷயங்களை, இப்போது பார்ப்போம்.
மாசாய் houses, மாசாய் மக்கள், மணியாட்டா எனப்படும் குடிசைகளில் வாழ்கின்றனர். பாரம்பரிய மாசாய் வீடுகள், வட்ட வடிவிலோ அல்லது ரொட்டி வடிவிலோ, மண், குச்சிகள், புல், மாட்டு சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஆகியவற்றால் ஆனது.
இந்த வீடுகளை கட்டும் பொறுப்பு, பெண்களுடையது. இது போன்ற பல உள்ளடக்கிய ஒரு கிராமத்தை சுற்றி, என்காம் எனப்படும் வேலியை கட்டமைக்கின்றனர். வேலி அமைக்கும் பொறுப்பை, ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வேலியானது, மாசாய் மக்களின் கால்நடைகளை, இரவு நேரத்தில், காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. மாசாய் மக்கள், நாடோடிகள் என்பதால், அவர்களது வீடுகள், நிலையற்றவை. மற்றும், எளிதில், சேதமாக கூடியவையாக, இருக்கின்றன.
மாசாய் சமூகம் :
மாசாய் சமூகம், ஆணாதிக்க இயல்புடையது. மூத்த மாசாய் ஆண்கள்தான், மாசாய் பழங்குடியினருக்கான, முக்கிய விஷயங்கள தீர்மானிக்கிறார்கள். பாரம்பரிய வாழ்க்கை முறைய வாழும், மாசாய் மக்களுக்கு, ஒரு முறையான இறுதிச்சடங்கு இல்லாமலேயே, வாழ்க்கை முடிவடைகிறது. மேலும், இறந்தவர்களை, மாமிசம் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்காக, வயல்களில் செல்கின்றனர்.
இறந்த உடலை அடக்கம் செய்வது, மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் என்று, மாசாய் மக்கள் நம்புவதால், பெரும்பாலான சடலங்களை, மாசாய் மக்கள், அடக்கம் செய்வதில்லை. அதே நேரத்தில், சமூகத்தின் மிக முக்கியமான தலைவராக இருப்பவர், இறந்து போனால் மட்டுமே, அடக்கம் செய்கின்றனர்.
பாரம்பரிய மாசாய் மக்களின் வாழ்க்கை முறையானது, அவர்களின் முதன்மையான உணவு ஆதாரமாக விளங்கும், கால்நடைகள் மீது கவனம் செலுத்துகிறது. மாசாய் சமூகத்தில், ஒரு மனிதனின் செல்வத்தின் அளவு, அவன் பெரும் குழந்தைகள் மற்றும் வைத்திருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளது. எனவே, ஏராளமான கால்நடைகள் இருந்தாலும், அதிக குழந்தைகள் இல்லாத ஒரு மனிதன், ஏழையாக கருதப்படுகிறான். அதே போல, அதிக குழந்தைகள் இருந்தாலும், குறைவான கால்நடைகள் வைத்திருக்கும் மனிதனும், ஏழையாக கருதப்படுகிறான்.
ஒரு மாசாய் புராணம், பூமியில் உள்ள அனைத்து கால்நடைகளும், மாசாய் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்கிறது. இந்த நம்பிக்கையின் விளைவாக, மாசாய் மக்களில் சிலர், பிற பழங்குடி மக்களின் கால்நடைகளும், தங்களுக்கே உரிமையானது என திருடி விடுவதும் உண்டு. இருப்பினும், இந்த நடைமுறை, இப்போது, மிகவும் குறைவாகவே உள்ளது.
மாசாய் மக்களின் கடவுள் :
Mazai மக்கள், ஏகத்துவவாதிகள். என்ங்கை என்பது, அவர்களின் கடவுள். மாசாய் மக்கள், தங்களது கடவுள், மிகவும் இரக்கம் உள்ளவர், மற்றும், அவர் அனுபவிக்கும் உணர்வுகளுக்கு ஏற்ப, வெவ்வேறு வண்ணங்களில், தன்னை வெளிப்படுத்துபவர் எனவும் நம்புகின்றனர். அதன்படி, கருப்பு மற்றும் அடர் நீறம் என்பது, கடவுள், மனிதர்களிடம், நல்ல மனநிலையில் இருப்பதை, குறிக்கிறது.
சிவப்பு நிறம் மனிதர்களிடத்தில், எரிச்சலுடன் இருப்பதை, அடையாளப்படுத்துகிறது. எங்கள் கடவுளுக்கு, இரண்டு அவதாரம் உண்டு. ஒன்று, என்ங்கை நோராக். இவர், கருப்பு நிறத்தில் இருப்பார். நன்மை செய்பவர், அன்பானவர். நிலத்தில், அதிகம் புற்களை வளர செய்பவர் மற்றும் செழிப்படைய செய்பவர். இவர் இடி மற்றும் மழையில் காணப்படுகிறார். மற்றொரு அவதாரம், என்ங்கை நான் நியோகி. இவர் சிவப்பு நிறத்தில் இருப்பவர். இவர் பழிவாங்கும் கடவுள். பஞ்சம் மற்றும் பசியை கொண்டு வருபவர். மின்னலிலும் அடையாளம் காணப்படுகிறார். இன்று, மாசாய் மக்களில் பெரும்பாலானோர், கிறிஸ்தவர்களாகவும், சொற்ப அளவிலானவர்கள், முஸ்லிமாகவும் உள்ளனர்.
மாசாய் உணவுப் பழக்கம் :
பாரம்பரிய மாசாய் உணவில், ஆறு அடிப்படை உணவுகள் உள்ளன. அவை, இறைச்சி, இரத்தம் , பால், கொழுப்பு, தேன் மற்றும் மரப்பட்டை ஆகியவை, பால் மற்றும் தயிரை விரும்பி குடிக்கின்றனர். சில சமயம், பாலில் கால்நடை ரத்தத்தையும் கலந்து குடிக்கின்றனர்.
கால்நடையின் கழுத்து நரம்பை, சிறிய அளவில் வெட்டுவதன் மூலம், பச்சை ரத்தத்தை பெறுகின்றனர். ரத்தம் கலந்த பால், பெரும்பாலும், ஒரு சடங்கு பணமாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. காளைகள், எருதுகள் மற்றும் ஆடுகள், விசேஷ நிகழ்வுகள், மற்றும் விழாக்களில், இறைச்சிக்காக, வெட்டப்படுகின்றன. விலங்குகள் வெட்டப்படும் போது கிடைக்கும் துணை பொருட்களான தோல், ரோமங்கள் போன்றவை படுக்கை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மாட்டுச்சாணம் வீடு கட்ட பயன்படுத்தப்படுகிறது. மாசாய் மக்களின் முழு வாழ்க்கை முறையும், அவர்களின் கால்நடைகளை சுற்றியே உள்ளது. சமீப காலமாக, மாசாய் மக்கள், தங்கள் உணவு தேவைக்கு, மக்காச்சோளம், அரிசி, முட்டைகோஸ் போன்ற, விவசாய பயிர்களையும், பயன்படுத்துகின்றனர்.
மாசாய் மக்களின், பாரம்பரிய ஆடை:
மாசாய் மக்களின், பாரம்பரிய ஆடை, வண்ணமயமானது. பாலினம், வயது மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது. விருத்த சேதனத்திற்கு பிறகு, பல மாதங்களுக்கு இளைஞர்கள், கருப்பு நிற ஆடையை அணிகின்றனர்.
மாசாய் மக்களின் மத்தியில், சிவப்பு ஒரு விருப்பமான நிறமாகும். கருப்பு, நீலம், கட்டங்கள் மற்றும் மற்றும் கோடுகளைக் கொண்ட, பல வண்ண ஆப்பிரிக்க ஆடைகளும், அணியப்படுகின்றன. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில், செம்மறை ஆட்டுத் தோல், கன்றுக்குட்டி தோல், மற்றும், பிற விலங்குகளின் தோலால் ஆன, ஆடைகளை அணிந்திருந்த, மாசாய் மக்கள், பின்னர், துணியால் ஆன ஆடைகளுக்கு, மாறினர். உடலை, கொள்ள பயன்படும் துணி, மாசாய் மக்களின் மொழியில், சுக்கா என்று அழைக்கப்படுகிறது.
மாசாய் பெண்கள், மணிகளால் ஆன நகைகளை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது அவர்களின் உடல் அலங்காரத்தில், முக்கிய பங்கு வகிக்கிறது. காது குத்துதல் மற்றும் காது மடல்களை நீட்டுதல் ஆகியவை, மாசாய் அழகின் ஒரு பகுதியாகும். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே, தங்கள் காது மடல்களில், உலோக வளையங்களை அணிகிறார்கள்.
மசாய் மரபுகள் :
மாசாய் மக்களில், ஆண்கள் மற்றும் பெண்கள், இருபாலருமே, சேதனம் மற்றும் திருமணம் போன்ற சடங்குகளை கொண்டாட, தங்களது தலையை மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இது வாழ்க்கையின் அத்தியாயங்களை, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடந்து செல்லும், ஒரு புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கிறது. மெல்லிய ஜடைகள் போல பின்னப்பட்டு, நீண்ட கூந்தலை, மாசாய் வீரர்கள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மொட்டை அடிப்பதும், வித்தியாசமான styleலில், முடி வளர்ப்பதும், மாசாய் மக்களின் கலாச்சாரத்தில், மிக முக்கிய அம்சமாகும். கடந்த பல தசாப்தங்களாக, மாசா இளைஞர்கள், ஒரு வீரனாக நிரூபிக்க, தனியாகவோ அல்லது குழுவாகவோ சென்று, சிங்கத்தை கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும், இரும்பு ஈட்டியை மட்டுமே பயன்படுத்தி, சிங்கத்தை கொள்ள வேண்டும் என்பது, இந்த சடங்கின் முக்கிய விதி.
மேலும், இந்த சடங்கில், குறிப்பாக, ஆண் சிங்க தான் கொள்ள வேண்டும். பெண் சிங்கங்கள் வாழ்க்கையின் புனிதமான மூதாதையர்களாக கருதப்படுவதால், பெண் சிங்கங்கள் வேட்டையாடப்படுவதில்லை. தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில், இந்த சிங்க வேட்டை சடங்கு தடை.
இப்படிதான் வாழ்கிறார்களா ஆப்ரிக்காவின்மாசாய் இன மக்கள்.